2022 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

உடல்நலம்



ராகு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிலும் கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து உங்கள் உடல் நலத்தை இந்த ஆண்டீன் தொடக்கத்தில் சற்று பாதிக்கலாம். ஏப்ரல் 14, 2022 வரை உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களின் உடல் நலம் சற்று பாதிக்கப்படலாம். சில மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தின் மீது நீங்கள் சற்று கவனம் செலுத்த வேண்டும்.




ஆனால் குரு உங்கள் ராசியின் 5 ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு பெயர்ந்ததும் உங்களுக்கு சிறப்பான பலன் வரத் தொடங்கும். ராகு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 14, 2022 அன்று பெயர்ச்சி ஆவதால் நீங்கள் விரைவில் குணமாவீர்கள். மே 2022 முதல் உங்கள் மருத்துவ செலவுகள் குறிப்பிடத்தக்க அளவு குறையும். இந்த ஆண்டின் வரவிருக்கும் மாதங்களில் உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.





Prev Topic

Next Topic