2022 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கண்ணோட்டம்


2022 புத்தாண்டு பலன்கள் – விருச்சிக ராசி (Scorpio Moon Sign). சனி பகவான் இந்த 2022 ஆம் ஆண்டும் உங்கள் ராசியில் நல்ல நிலையில் சஞ்சரிப்பார். குரு ஏப்ரல் 14, 2022 அன்று உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டில் இருந்து 5 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். இது சிறப்பான ஒரு நிலையாக இருக்கும். ராகு மற்றும் கேது பெயர்ச்சியும் ஏப்ரல் 14, 2022 அன்றே நடப்பதால் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு நல்ல நேர்மறை சக்திகள் கிடைக்கும்.
இந்த ஆண்டின் முதல் 4 மாதங்கள் குரு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் முன்னேற்றங்கள் சற்று மெதுவாகவே நடைபெறும். ஆனால் ஏப்ரல் 14, 2022 ஐ அடைந்ததும் உங்கள் வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும். மேலும் ராகு மற்றும் கேது பெயர்ச்சியும் அதே நாளில் ஏப்ரல் 14, 2022 அன்று நடைபெறுகிறது. இது உங்கள் அதிர்ஷ்டங்களை மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.


ஏப்ரல் 2022 முதல் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பங்குச்சந்தை வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீட்டிற்கு குடி பெயருவதாலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெளிநாட்டு பயணம் செய்யவும் உங்களுக்கு வாய்ப்புகள் பல கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், உங்களுக்கு கிரீன் கார்டு கிடைத்து இந்த ஆண்டே நீங்கள் குடியுரிமையையும் பெரும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நவம்பர் 2022 வாக்கில் நீங்கள் ஒரு பிரபலமாகும் வாய்ப்பும் உள்ளது.

மொத்தத்தில் இந்த ஆண்டு உங்கள் வாழ்நாளிலேயே ஒரு பொற்காலமாக இருக்கும்.



Prev Topic

Next Topic