2022 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

ஏப்ரல் 14, 2022 முதல் ஜூலை 28, 2022 வரை விண்ணைத்தொடும் லாபம் (90 / 100)


குரு உங்கள் ராசியின் 5 ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டங்களைத் தருவார். மேலும் ராகு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகி உங்கள் வளர்ச்சியையும் வெற்றியையும் அதிகரிப்பார். கேது உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்லப் பலனைத் தருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிற்கு அதி சரமாய் பெயர்ந்தாலும், அதன் தாக்கம் இந்த பாகத்தில் உணரப்படாது.
உறவுகள் சார்ந்த விடயங்களில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். நல்ல வால்க்கைத்துனையைக் கண்டறிந்து திருமண முயற்சிகளைச் செய்ய இது ஏற்ற நேரம். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் குழந்தை பேறு பெரும் பாக்கியம் சிறப்பாக உள்ளது. காதலர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.


நீங்கள் புது வேலை வாய்ப்புக்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால், நல்ல சம்பளத்தோடு சிறப்பான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்த பதவி உயர்வும் நல்ல சம்பளத்தோடு இப்போது கிடைக்கும். உங்கள் வணிகத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு பிறர் உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். ஆனால் உங்கள் வளர்ச்சியும் வெற்றியும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும்.


Prev Topic

Next Topic