2022 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வேலை / உத்தியோகம்



ராகு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் மேலாளருடன் உங்களுக்கு இருக்கும் உறவு சுமாராகவே இருக்கும். அலுவலகத்தில் சில அரசியலும் உங்களுக்கு எதிரான சதிகளும் இருக்கும். ஆனால், இது உங்கள் நீண்ட கால வளர்ச்சியை பாதிக்காது. உங்களுக்கு சில முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஏப்ரல் 14, 2022 வரை அதன் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும்.


ஏப்ரல் 14, 2022 அன்று குரு, ராகு மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்களும் உங்களுக்கு சாதகமான நிலைக்கு பெயர்ச்சி ஆனதும் நீங்கள் எதிர்பாராத மாற்றத்தை சந்திப்பீர்கள்/ அனைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரித்து ஏப்ரல் 14, 2022 முதல் உங்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களைத் தரத் தொடங்குவார்கள். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையைப் பெறுவீர்கள் மேலும் உங்கள் அலுவலகத்தில் உங்களுக்குகான முக்கியத்துவத்தையும் பெறுவீர்கள். மேலும் நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். பெரிய அளவில் போனசும் சம்பள உயர்வும் உங்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஏப்ரல் 14, 2022 க்கு பிறகு நீங்கள் உத்தியோகத்தில் மாற்றங்களை செய்ய சிறப்பான நேரமாக உள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு கிடைக்கும் போனஸ் மற்றும் பங்குகளால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வருமானம், பதவி மற்றும் அலுவலகத்தில் உங்களுக்கு கிடைத்துள்ள நிலை உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும். மேலும் மேற் நிர்வாகத்தில் இருப்பவருடன் நீங்கள் நெருக்கமாவீர்கள். மொத்தத்தில் இந்த 2022 ஆம் ஆண்டு நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் மைல்கல்லை அடைய உதவும் சிறந்த ஆண்டாக இருக்கும்.



Prev Topic

Next Topic