![]() | 2022 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
தொழில்முனைவோர்கள் இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் கடுமையான பாதைகளை கடக்க நேரலாம். குரு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிலும் ராகு உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பது மிகவும் சாதகமற்ற ஒரு நிலையாகும். சனி பகவான் உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பாதிப்பார். உங்கள் மறைமுக எதிரிகள் அதிக பலம் பெறுவார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் எதிர்பாராத பின்னடைவை சந்திக்கக் நேரலாம். ஏப்ரல் 14, 2022 வரை உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சியை தவிர்த்து விட்டு, செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வது நல்லது.
குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிலும் கேது 6 ஆம் வீட்டிலும் ஏப்ரல் 14, 2022 முதல் சஞ்சரிக்க உள்ளனர், இதனால் நீங்கள் சிறப்பான பலனைப் பெறுவீர்கள். ஏப்ரல் 14, 2022 முதல் உங்களுக்கு பொற்காலமாக இருக்கும். உங்கள் வங்கிக் கடன்கள் ஒப்புதல் பெரும். உங்களுக்கு நல்ல பண வரத்தை ஏற்படுத்தக் கூடிய பல நல்ல ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். நீங்கள் ஒரு தொடக்க நிலை வணிகத்தை நடத்திக் கொண்டிருந்தாள், அதன் மூலம் உங்களுக்கு நல்ல சலுகைகள் வரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் ஏப்ரல் 14, 2022 க்கு மேல் நீங்கள் பணக்காரராகவும் வாய்ப்பு உள்ளது. சுய தொழில் புரிவோர்கள், மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.
Prev Topic
Next Topic