![]() | 2022 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கல்வி |
கல்வி
மாணவர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இல்லை. நீங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால், கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் நண்பர்களுடன் உங்களுக்கு கடுமையான நேரம் நிலவலாம். உங்கள் உடல் நலமும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு பாதிக்கப்படலாம். நீங்கள் விளையாட்டில் இருந்தால், உங்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சோதனை காலத்தை கடக்க நீங்கள் நல்ல ஆலோசகரின் ஆலோசனையைப் பெற முயற்சிக்க வேண்டும்.
குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு ஏப்ரல் 14, 2022 அன்று பெயர்ச்சி ஆனதும் நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணத் தொடங்குவீர்கள். உங்களுக்கு சிறந்த பள்ளி மற்றும் பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் சாதனைகளைக் கண்டு பெருமைபாடுவார்கள். நீங்கள் விளையாட்டில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
Prev Topic
Next Topic