2022 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்



கேது உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிலும் சனி பகவான் 9 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கைத்துணை, பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் இருக்கும் உறவை பாதிப்பார். உங்கள் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிலும் ராகு ஜென்ம ராசியிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் பிரச்சனையின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். ஏப்ரல் 14, 2022 முதல் நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்த்துவிடுவது நல்லது.


ஏப்ரல் 14, 2022 முதல் விடயங்கள் நல்ல திருப்பத்தை எடுக்கத் தொடங்கும். அனைத்தும் உங்களுக்கு சாதகமான திசையில் நடக்கத் தொடங்கும். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்யத் தொடங்குவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற காலம். உங்கள் குடும்பத்தினர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

ஜூலை 28, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரையிலான மூன்றாம் பாகத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் குரு வக்கிர கதி ஆகிறார். கேது உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் எந்த அரசியலும் இருக்காது. விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.




Prev Topic

Next Topic