![]() | 2022 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2022 முதல் ஏப்ரல் 14, 2022 வரை அலுவலகத்தில் அரசியல் (50 / 100)
கடந்த 2021 ஆம் ஆண்டு குரு உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்ததன் பலநாள் நீங்கள் சிறப்பான பலனை பெற்றிருப்பீர்கள். தற்போது குரு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சாதகமற்ற நிலையில் இந்த பாகத்தில் சஞ்சரிக்க உள்ளார். மேலும் ராகு உங்கள் ஜென்ம ராசியிலும் கேது களத்திற ஸ்தானத்திலும் சஞ்சரிகின்றனர். உங்கள் உடல் உபாதைகள் அதிகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை, பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் உடல் நலமும் பாதிக்கப்படலாம். இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். போதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்ள முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும்.
சனி பகவான் பலவீனமான இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கைத்துனையுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கமாட்டார்கள். புது உறவைத் தொடங்க இது ஏற்ற நேரமாக இல்லாமல் இருக்கலாம். குழந்தை பேறு பெரும் பாக்கியமும் சிறப்பாக இருக்காது.
அலுவலகத்தில் அரசியல் கடுமையாக இருக்கும் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் புதிதாக நிர்வாகம் அமைக்கப்படுவதால் அல்லது புதிய குழுவில் நீங்கள் சேர நேர்ந்தால் உங்களுக்கான முக்கியத்துவத்தை நீங்கள் இழக்க நேரலாம். அலுவலகத்தில் நடக்கும் மாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராமல் போகலாம். நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருக்கும். உங்களுக்கு விருப்பம் இல்லாத வேலையை நீங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வை எதிர்பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. இந்த காலகட்டம் தொழில்முனைவோர்களுக்கும் சிறப்பாக இல்லை. உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சியை தவிர்த்து விட்டு செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
எதிர்பாராத செலவுகளால் உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் தருவதையோ அல்லது கடன் வாங்குவதையோ தவிர்த்துவிடுவது நல்லது. இந்த பாக காலகட்டத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாக இருப்பதால் பங்குச்சந்தை வர்த்தகத்தை தவிர்த்துவிடுவது நல்லது.
Prev Topic
Next Topic