![]() | 2022 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | நான்காம் பாகம் |
அக்டோபர் 23, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை மன அழுத்தம் ஆனால் பண மழை பொழியும் (85 / 100)
சனி பகவான் உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்களுக்கு மனக் கவலை மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். ஆனால் இந்த பாகத்தில் உங்கள் அதிர்ஷ்டம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எதை செய்தாலும் அதில் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவீர்கள். பண மழை பொழியும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. உங்கள் உடல் நலம், குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த விடயங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை கண்டறிந்து திருமணம் செய்து கொள்ள இது ஏற்ற நேரம். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தை இயற்கையாகவோ அல்லது IVF மூலமாகவோ பெறுவார்கள்.
உங்கள் அலுவலகத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு, புது வேலை வாய்ப்பு, இடமாற்றம் போன்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களது விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக வெளியில் வந்துவிடுவீர்கள். புது வீடு வாங்குவது மற்றும் சொத்துகளில் முதலீடு செய்வது போன்ற விடயங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். உங்களுக்கு வெளிநாட்டிற்கு பயணம் செய்ய எளிதாக விசா கிடைக்கும். வெளிநாட்டிற்கு நீங்கள் குடிபெயரும் வாய்ப்பு உள்ளது. பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் போன்றவை நவம்பர் 26, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை முயர்ச்சி செய்து பார்க்கலாம்.
Prev Topic
Next Topic