![]() | 2022 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | உடல்நலம் |
உடல்நலம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டிருக்கலாம். ராகு உங்கள் ஜென்ம ராசியிலும் சனி பகவான் உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் உடல் நலத்தை பாதிப்பார்கள். குரு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சரியான மருத்துவம்/மருந்து கிடைக்காமல் போகலாம். ஏப்ரல் 14, 2022 வரை உங்கள் உடல் உபாதைகள் அதிகமாகவே இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களின் உடல் நலமும் பாதிக்கப்படலாம்.
ஆனால் குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்சி ஆனதும் விடயங்கள் சிறப்பாக நடக்கத் தொடங்கும். ராகும் ஏப்ரல் 14, 2022 அன்று உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் நீங்கள் விரைவாக குணமடைவீர்கள். மே 2022 முதல் உங்கள் மருத்துவ செலவுகள் குறிப்பிடத்தக்க அளவு குறையும். இதன் பிறகு இந்த 2022 ஆண்டின் வரவிருக்கும் பகுதியில் கேது உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
ஏப்ரல் 14, 2022 வரை சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். இதன ஆண்டின் வரவிருக்கும் பகுதி உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
Prev Topic
Next Topic