2022 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

வழக்கு



இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு எதிரான அதிக சதிகளும் பிரச்சனைகளும் உங்களுக்கு இருக்கலாம். சட்ட பிரச்சனைகளால் உங்களுக்கு மன நிம்மதி இல்லாமல் இருக்கலாம். உங்கள் மீதான தவறான குற்றச்சாட்டால் உங்களுக்கு அவப்பெயரும் பண இழப்பும் ஏற்படலாம். உங்களால் கிரிமினல் வழக்கில் இருந்து வெளி வர முடியாமல் போகலாம். வேறு ஏதேனும் வாய்ப்புகள் இருக்குமா என்பதை நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்தே தெரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்ற வழக்குகள் ஏதேனும் நடகின்றது என்றால், முடிந்த வரை அதனை ஏப்ரல் 14, 2022 வரை தள்ளிப்போட முயற்சிப்பது நல்லது.



ஏப்ரல் 14, 2022 முதல் கேது உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். ஏப்ரல் 14, 2022 க்கு பிறகு சட்ட வழக்குகளில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள், கிரிமினல் வழக்கில் இருந்தும் நீங்கள் வெளியில் வருவீர்கள். உங்கள் சொத்துகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு உங்களுக்கு சாதகமாகவே நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் விவாகரத்து, ஜீவனாம்சம் மற்றும் குழந்தை காவல் போன்ற வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.




Prev Topic

Next Topic