![]() | 2022 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | காதல் |
காதல்
உங்கள் உறவுகள் குறித்த விடயங்கள் சிறப்பாக இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படலாம். நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஆனால் உங்கள் சோதனை காலம் ஏப்ரல் 14, 2022 வரை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். ஆனால் நீங்கள் பொறுமையாக இருக்கவில்லை என்றால், தற்காலிகமாக பிரியும் வாய்ப்பும் உள்ளது. புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏப்ரல் 14, 2022 முதல் நீங்கள் உங்கள் சோதனை காலத்தில் இருந்து வெளியில் வந்து விடுவீர்கள். அதன் பின்னர் நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு நீங்கள் நல்ல தீர்வையும் பெறுவீர்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். இயற்கையாகவே குழந்தை பேறு பெரும் பாக்கியம் உங்களுக்கு உண்டாகும். மேலும் IVF மற்றும் IUI போன்ற எந்த மருத்துவ சிகிச்சையும் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்கள் காதல் திருமணத்திற்கு உங்கள் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை பெற்று நீங்கள் திருமணமும் செய்து கொள்வீர்கள். டிசம்பர் 2022 வாக்கில் நீங்கள் காதலிக்கவும் வாய்ப்பு உள்ளது.
Prev Topic
Next Topic