2022 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


2022 புத்தாண்டு பலன்கள் – ரிஷப ராசி ! கடந்த 2021 ஆம் ஆண்டு குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் நீங்கள் சிறப்பான பலன்களை பெற்றிருப்பீர்கள். கடந்த ஆண்டு நீங்கள் மிதமான வளர்ச்சியையும் வெற்றியையும் பெற்றிருப்பீர்கள். ஆனால் இந்த ஆண்டு உங்களுக்கு சற்று மந்தமாகவே இந்த புத்தாண்டு தொடங்கும். குரு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவது சிறப்பாக இல்லை. ராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்கள் உடல் உபாதைகளை அதிகரிப்பார். கேது உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களுடன் இருக்கும் உறவை பாதிப்பார்.

ஆனால் உங்களுக்கு இருக்கும் இந்த சோதனை காலம் அடுத்த 4 மாதங்களுக்கு ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். வரவிருக்கும் ஏப்ரல் 14, 2022 அன்று ஏற்படும் குரு, ராகு மற்றும் கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக உள்ளது. ஏப்ரல் 14, 2022 முதல் ஜூலை 28, 2022 வரை நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த விடயங்களில் உங்களுக்கு நல்ல உதவிகளை செய்வார். உங்கள் நிதி நிலையம் ஏப்ரல் 14, 2022 முதல் நல்ல முன்னேற்றத்தைப் பெரும்.



ஜூலை 28, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை மிதமான பின்னடைவுகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவார். ஆனால் அக்டோபர் 24, 2022 முதல் மீண்டும் நல்ல பலத்தை நீங்கள் பெறுவீர்கள். மூச்சு பயிற்சி செய்து விஷ்ணு சஹாசார நாமம் கேட்பதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.


மொத்தத்தில் இந்த 2022 ஆம் புத்தாண்டு ஏப்ரல் 14, 2022 முதல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை.


Prev Topic

Next Topic