2022 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


திரைநட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்கள் இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் மூன்று மாதங்களுக்கு அதிக சவால்களை சந்திப்பார்கள். உங்கள் பட வெளிவர இருந்தால், அது தோல்வி அடையவும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் இரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள். உங்களுக்கு பணம் கடன் தந்தவர்கள் உங்களிடம் அதனை திருப்பி வாங்க உங்களுக்கு நெருக்கடியை உண்டாக்குவார்கள். ஆனால் ஏப்ரல் 14, 2022 வரை உங்களால் எந்த நிவாரணத்தையும் காண முடியாது.


குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிலும் கேது 6 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து ஏப்ரல் 14, 2022 முதல் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள். உங்களுக்கு பெரிய படங்களில் இருந்து நல்ல வாய்புகள் வரும். உங்களுக்கு சிறப்பான நிதி வெகுமதிகளும் கிடைக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் 2022 இல் நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். இதனால் மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.


Prev Topic

Next Topic