![]() | 2022 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | இரண்டாம் பாகம் |
ஏப்ரல் 14, 2022 முதல் ஜூலை 28, 2022 வரை நல்ல அதிர்ஷ்டம் (85 / 100)
குரு இந்த பாக காலகட்டத்தில் உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். கடந்த பாகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் இப்போது முடிவுக்கு வரும். விடயங்கள் உங்களுக்கு சாதகமாக நகரத் தொடங்கும். ஏப்ரல் 14, 2022 அன்றே ராகு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிற்கும் கேது 6 ஆம் வீட்டிற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். கேது உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மறைமுக எதிரிகளை இல்லாமல் செய்வார். எனவே இந்த பாகத்தில் நீங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவீர்கள்.
ஜூன் 4, 2022 அன்று சனி பகவான் வக்கிர கதி அடைவது மற்றுமொரு நல்ல செய்தியாகும். அனைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், இது உங்களுக்கு ஒரு பொற்காலமாகும். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களுடன் இருக்கும் உறவில் நல்ல முன்னேற்றம் ஏறபடும். புதிய உறவைத் தொடங்க இது ஏற்ற நேரம். குழந்தை பேறு பெரும் பாக்கியம் சிறப்பாக உள்ளது. உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம், புதுமனை புகு விழா போன்ற சுப காரியங்கள் நிகழ்த்த இது சிறப்பான நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும்.
கடந்த பாகத்தில் நீங்கள் செய்த கடின உழைப்பிற்கான சிறப்பான வெகுமதிகளை நீங்கள் இப்போது பெறுவீர்கள். உங்களுக்கு நல்ல நிதி லாபங்கள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் இந்த பாகத்தில் பணக்காரராகும் வாய்ப்பும் உள்ளது. புது வீடு வாங்க அல்லது சொத்துக்களில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். உங்களுக்கு பண மழை பொழியும்.
உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் இந்த காலகட்டத்தில் ஒப்புதல் பெரும். சுற்றுலா அல்லது உத்தியோகம் காரணமாக நீங்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் அனைத்து அதிர்ஷ்டங்களையும் மகிழ்ச்சியாக பெற நீங்கள் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
Prev Topic
Next Topic