![]() | 2022 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் |
பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள்
2022 இன் முதல் மூன்று மாதங்களுக்கு பயணம் உங்களுக்கு அதிக பிரச்சனைகளை உண்டாக்கலாம். மேலும் புதிய இடத்தில் அந்த இடத்தைப் பற்றிய போதிய விவரங்கள் உங்களுக்கு தெரியாமல் இருப்பதால், அங்குள்ளவர்கள் உங்களை ஏமாற்ற நினைக்கலாம். உங்கள் சமூக வாழ்க்கை போதிய நண்பர்கள் புதிய இடத்தில் இல்லாததால் பாதிக்கப்படலாம். உங்களுக்கு பயண சீட்டு, தாங்கும் விடுதி போன்ற விடயங்களில் உங்களுக்கு நல்ல சலுகை கிடைக்காமல் போகலாம். நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால், உங்களுக்கு விசா சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 14, 2022 வரை குடியேற்றம் போன்ற பலன்களை உங்களால் எதிர்பார்க்க முடியாது.
ஏப்ரல் 14, 2022 முதல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் மேற்கொண்டு எந்த ஒரு தாமதமும் இன்றி ஒப்புதல் பெரும். வெளிநாட்டிற்கு நீங்கள் குடிபெயர உள்ளதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வணிகம் சார்ந்த பயணம் உங்களுக்கு பெரிய அளவில் வெற்றியைத் தரும். சுற்றுலாவின் போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் செல்லும் இடத்தில் உங்களுக்கு நல்ல தங்கும் வசதி கிடைக்கும். புது கார் வாங்க அல்லது நீங்கள் பல நாட்களாக செல்ல வேண்டும் என்று ஆசைப் பட்ட சுற்றுலாவிற்கு 2022 இன் இறுதி காலாண்டின் போது திட்டமிடலாம்.
Prev Topic
Next Topic