![]() | 2022 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
தொழில்முனைவோர்கள் இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் அதிக சவால்களை சந்திப்பார்கள். குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் ராகு 9 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் வணிகத்தின் வளர்ச்சியை மிகவும் அதிகமாக பாதிப்பார்கள். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் பெறுவார்கள். உங்களுக்கு உங்கள் தொழில் பங்குதாரருடன் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் எதிர்பாராத பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். ஏப்ரல் 2022 வரை உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சியை தவிர்த்துவிட்டு செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பது நல்லது.
குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரித்து மே 2022 வரை விடயங்களை மோசமாக்கலாம். நீங்கள் மே 2022 முதல் வாரத்தை அடைந்ததும் நல்ல மாற்றங்களை சந்திக்கத் தொடங்குவீர்கள். அக்டோபர் / நவம்பர் 2022 ஐ அடைந்ததும் உங்களுக்கு ஏற்படும் முன்னேற்றத்தால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு நல்ல பண வரத்தை ஏற்படுத்தக்கூடிய அளவு புதிய ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். சுய தொழில் புரிவோர்கள், கமிசன் ஏஜெண்டுகள் தங்களுக்கு நல்ல வெகுமதிகள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் சனி பகவான் உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பணம் ஈட்டுவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். உங்கள் சொந்த வாழ்க்கையிலும் உறவுகளுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளாலும் நீங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.
Prev Topic
Next Topic