![]() | 2022 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த 2022 புத்தாண்டில் உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம். ஏப்ரல் 2022 க்கு முன் நீங்கள் பண விடயங்களில் ஏமாற்றப்படலாம். உங்களுக்கு தேவை இல்லாத மற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உணல் சேமிப்புகள் விரைவாக கரையலாம். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் தருவதோ அல்லது கடன் வாங்குவதையோ தவிர்த்துவிடுவது நல்லது. வேறு வீட்டிற்கு அல்லது புது வீட்டிற்கு குடி பெயர்வதை தவிர்த்துவிடுவது நல்லது. ஏனென்றால், புதிய இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு நண்பர்கள் இல்லாததாலும், சமூக வாழ்க்கை குறைவாக இருப்பதாலும் அதிக தனிமையை உணருவீர்கள். உங்கள் பண வரத்து பாதிக்கப்படலாம். உங்கள் வங்கிக் கடன் சரியான நேரத்தில் ஒப்புதல் பெறாமல் போகலாம்.
குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரித்து மே 2022 முதல் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். உங்களுக்கு உங்கள் கடனை அடைத்துவிடவும் நிதி மறுபரிசீலனைச் செய்யவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். நீங்கள் அக்டோபர் 2022 ஐ அடைந்ததும் விடயங்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெரும். பண வரத்து பல வழிகளில் இருந்தும் வரும். உங்களால் போதிய பணத்தை சேமிக்க முடியும் மேலும் புது வீடும் வாங்குவீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நவம்பர் 2022 முதல் நீங்கள் சொத்துகளில் முதலீடு செய்ய முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic