![]() | 2022 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2022 முதல் ஏப்ரல் 28, 2022 வரை மனக் கவலை மற்றும் பதற்றம் (30 / 100)
குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் ராகு 9 ஆம் வீட்டிலும் சனி பகவான் 5 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது மிகவும் மோசமான சஞ்சாரமாக இருக்கும். உங்கள் உடல் மற்றும் மனம் இந்த பாக காலகட்டத்தில் பாதிக்கப்படலாம். உங்கள் உடல் நல பிரச்சனைகள் சிக்கலாகலாம். மேலும் சரியான வைத்தியமும் கிடைக்காமல் போகலாம்.
உங்களுக்கு மன அழுத்தம் மிகவும் அதிகமாகலாம். உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால், இந்த காலகட்டத்தில் நீங்கள் தற்காலிகமாக பிரியும் சூழலும் ஏற்படலாம். காதலர்கள் வலி மிகுந்த சம்பவங்களை சந்திப்பார்கள்.
உங்கள் உத்தியோக வாழ்க்கையும் பாதிக்கப்படலாம். இது குறிப்பாக போதிய கவனம் இல்லாததால் ஏற்படும். நீங்கள் உங்கள் சொந்த பிரச்சனைகளை சரி செய்வதற்காக அதிக நேரத்தை எடுத்துக் கொள்வீர்கள். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுடைய இந்த பலவீனமான சூழலை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு அவர்கள் வளர முயற்சிப்பார்கள். நீங்கள் இந்த காலகட்டத்தில் பணத்தைப் பற்றி கவலைப் பட மாட்டீர்கள். மேலும் அதிக பணத்தையும் கட்டுப்பாடு இன்றி செலவு செய்வீர்கள்.
கசினோ அல்லது அதிர்ஷ்ட்ட சீட்டு அல்லது சூதாட்டம் போன்றவற்றை முயற்சிக்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தவறான திசையில் அதிக பணத்தை பெட் செய்து இழக்க நேரலாம். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic