2022 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

அக்டோபர் 23, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை மனக் கவலை இருக்கலாம் ஆனால் நல்ல அதிர்ஷ்டமும் இருக்கும் (60 / 100)



இந்த காலகட்டம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக இருக்கும். ஆனால் உங்களுக்கு இருக்கும் மனக் கவலை மற்றும் பதற்றத்தால் உங்களால் இந்த அதிர்ஷ்டங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாமல் போகலாம். உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியையும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பீர்கள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு பிறர் உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். ஆனால் உங்கள் சொந்த பிரச்சனைகளாலும் உறவுகளுடன் இருக்கும் சிக்கல்களாலும் உங்களுக்கு மனக் கவலையும் பதற்றமும் ஏற்படலாம். இந்த காலகட்டம் உங்களுக்கு உளவியல் ரீதியாக சவால் நிறைந்த காலமாக இருக்கும்.




உங்கள் குழந்தைகள் உங்களிடம் புதிய தேவைகளை முன் வைப்பார்கள். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். காதலர்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் வலி மிகுந்த உணர்வோடே இருப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் தற்காலிகமாக பிரியும் சூழல் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் குழந்தை பேறுக்கு திட்டமிடுவதை தவிர்த்துவிடுவது நல்லது.





உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். மேலும் அடுத்த நிலைக்கு நல்ல சம்பளத்தோடு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற காலமாக இருக்கும். உங்களுக்கு ஏற்பட்ட உளவியில் பிரச்சனையில் இருந்து வெளியில் வந்து பெப்ரவரி 2023 முதல் ராஜ யோகத்தைப் பெறத் தொடங்குவீர்கள்.

Prev Topic

Next Topic