2022 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

காதல்



எதிர்பாராவிதமாக, காதலர்கள் கடுமையான சோதனை காலத்தை சந்திப்பார்கள். நீங்கள் காதலிப்பார் மீது அவரது சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையில் அதிக உடைமையோடு இருப்பீர்கள். நீங்கள் அதிகமாக அவர் மீது உடைமையோடு இருப்பதால் தொடர்ந்து அவரை கண்காணித்துக் கொண்டே இருப்பதால், இது உங்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு மற்றும் சண்டைகளை ஏற்படுத்தலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், மேலும் நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரியவும் நேரலாம். உங்களைப் பற்றிய உணர்வுப்பூர்வமான விடயங்களைப் பற்றி வேறு யாரிடமும், உங்கள் நண்பர்களாக இருந்தாலும் கூட பகிர்வதை தவிர்த்துவிடுவது நல்லது. அப்படி செய்தால், அவர்கள் உங்களது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு மே 2022 வரையிலான காலகட்டத்தில் உங்களை நிரந்தரமாக நீங்கள் காதலிப்பவரிடம் இருந்து பிரித்துவிடலாம்.



ஜூன் 2022 முதல் குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் விடயங்கள் சற்று முன்னேற்றம் பெரும். உங்களுக்கு எதிராக எந்த சதிகளும் இல்லாமலாவது இருக்கும். அக்டோபர் 2022 உங்களுக்கு மற்றுமொரு கடினமான மாதமாக இருந்தாலும், டிசம்பர் 2022 முதல் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம் ஆன தம்பதியினர் அன்யுனியத்தோடு இருப்பார்கள். பல விடயங்களை நீங்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டியது இருக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், டிசம்பர் 2022 வரை காத்திருந்து, அதன் பின்னர் நீங்கள் திருமண முயற்சியை எடுக்கலாம்.



Prev Topic

Next Topic