![]() | 2022 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2022 புத்தாண்டு பலன்கள் - கன்னி ராசி (Virgo Moon Sign). இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீடான ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். நீண்ட காலமாக சனி பகவான் உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றத்தை தந்திருப்பார். ராகு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் சிறப்பாக இல்லை. இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் பல விடயங்களிலும் கடுமையான சோதனை காலத்துடனே தொடங்கும். கேது உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு உதவிகளை செய்வார். ஹனுமான் சாலிசா மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் உங்கள் உடல் நல பிரச்சனைகள் குறையும்.
ஆனால் குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரித்து ஏப்ரல் 14, 2022 முதல் உங்களுக்கு விடயங்களில் சற்று முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். ஏப்ரல் 14, 2022 அன்று நடக்கவிருக்கும் ராகு / கேது பெயர்ச்சியும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. மே 2022 முதல் உடல்நலம், உத்தியோகம், நிதி நிலை மற்றும் முதலீடுகள் போன்ற விடயங்களில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். ஆனால் சனி பகவான் உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் நவம்பர் 3௦, 2022 வரை தொடர்ந்து சஞ்சரித்து உங்கள் மன நிலையில் மாற்றங்களையும் நிலையற்றத் தன்மையையும் ஏற்படுத்துவார்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic