2022 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

ஏப்ரல் 14, 2022 முதல் ஜூலை 28, 2022 வரை சிறப்பான நேரம் (85 / 100)



குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீடான களத்திற ஸ்தானத்தில் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்வை இடுவதால் இந்த காலட்டத்தில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். ஜூன் 5, 2022 அன்று சனி பகவான் வக்கிர கதி அடைந்து உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியை அதிகரிப்பார். ராகு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிலும் கேது 2 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து விடயங்களை மேலும் சிறப்பாக்குவார்கள்.


உங்கள் நிவாரணத்தின் வேகம் உங்கள் பிறந்த சாதகத்தை சார்ந்தே உள்ளது. ஆனால் கோசார கிரகங்கள் சிறப்பான நிலையில் சஞ்சரித்து நீங்கள் நல்ல நிவாரணமும் வளர்ச்சியும் பெற உதவுவார்கள். உங்கள் உடல் நலம் இந்த பாக காலகட்டத்தில் நல்ல முன்னேற்றம் பெரும். உங்கள் கடந்த பாகத்தில் ஏற்பட்ட சம்பவங்களில் இருந்து சற்று விடுபடவும் அதனை கடக்கவும் போதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்ய இது ஏற்ற நேரம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள்.

உங்கள் அலுவலகத்தில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்கவும் இது ஏற்ற நேரம். உங்களுக்கு நல்ல சம்பளத்தோடு சிறப்பான வேலை வாய்ப்பும் கிடைக்கும். நீங்கள் காத்திருந்து முயற்சித்தால் நல்ல சம்பளத்தோடு நல்ல பதவியும் கிடைக்கும். நீங்கள் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெறுவீர்கள்.



உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு பங்குகளில் நல்ல லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பங்கு வர்த்தகம் இந்த பாகத்தில் நல்ல லாபத்தை தரும். உங்கள் வங்கிக் கடன்களும் தாமதமின்றி ஒப்புதல் பெரும். நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயரும் முயற்சியில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெளிநாட்டிற்கு குடிபெயரவும் இது ஏற்ற நேரம்.

Prev Topic

Next Topic