![]() | 2022 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
ஏப்ரல் 14, 2022 வரை நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். இது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம். குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் ராகு 9 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு பெரும் அளவில் முதலீடுகளில் பண இழப்பை ஏற்படுத்தலாம். மேலும் ஏப்ரல் 14, 2022 க்கு முன் நீங்கள் கடந்த ஆண்டு முழுவதும் சேர்த்து வைத்த இலாபத்தை இழக்க நேரலாம். நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகளில் இருந்தும் முற்றிலுமாக விலகி இருக்க வேண்டும். புது வீடு வாங்க இது ஏற்ற நேரம் இல்லை. பாதுகாப்பான முதலீடுகள் செய்ய முயற்சிப்பது நல்லது.
ஏப்ரல் 14, 2022 அன்று குரு, ராகு மற்றும் கேது பெயர்ச்சி நடந்ததும், உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கும். ஆனால் உங்கள் நிவாரணத்தின் வேகம் உங்கள் பிறந்த சாதகத்தை சார்ந்தே இருக்கும். நீங்கள் நீண்ட கால முதலீடுகளை பங்குசந்தையில் செய்யலாம். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றால் நவம்பர் 2022 க்கு மேல் உங்களுக்கு அதில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆனால் சொந்த மற்றும் குடும்ப பிரச்சனைகளில் நீங்கள் சிக்கிக் கொண்டிருப்பீர்கள் என்பதால் இந்த ஆண்டு நீங்கள் பணம் ஈட்டுவதில் அதிக ஆர்வம் கொள்ளமாட்டேர்கள். ஹனுமான் சாலிசா மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்டு நேர்மறை சக்திகளைப் பெறுங்கள், உங்கள் மனதை நிலையாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic