![]() | 2022 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் |
பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள்
ஏப்ரல் 2022 வரை பயணம் உங்களுக்கு அதிகப்படியான பிரச்சனைகளை உண்டாக்கும். உங்கள் சமூக வாழ்க்கை போதுமான நண்பர்கள் நீங்கள் செல்லும் இடத்தில் இல்லாததால் பாதிக்கப்படலாம். உங்களுக்கு மனக் கவலை மற்றும் அழுத்தம் அதிகரிக்கலாம். நீங்கள் எந்த உதவியும் இல்லாமல் அதிகத் தனிமையை உணருவீர்கள். எனவே உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடனேயே இருப்பது நல்லது. இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பயண சீட்டும் தங்கும் விடுதி போன்றவற்றில் உங்களுக்கு சலுகைகள் கிடைக்காமல் போகலாம். நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால், உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து நீங்கள் மீண்டும் தாய்நாடு திரும்பும் சூழல் ஏற்படலாம்.
ஏப்ரல் 2022 ஐ நீங்கள் கடந்ததும் உங்கள் சோதனை காலம் முடிந்துவிடும். உங்கள் விசா மற்றும் குடியேற்றம் சம்பந்தமான பிரச்சனைகள் மே மற்றும் ஜூன் 2022 வாக்கில் நல்ல தீர்வைப் பெரும். உங்கள் தொழில் சார்ந்த பயணம் உங்களுக்கு பெரும் அளவு வெற்றியைத் தரும். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் உங்களக்கு பயணம் சிறப்பான பலனைத் தரும். உங்களுக்குச் செல்லும் இடத்தில நல்ல தங்கும் வசதிகள் கிடைக்கும். சுற்றுலாவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது கார் வாங்கி உங்கள் சௌகரியத்தை அதிகரிக்கும் வாய்ப்பு டிசம்பர் 2022 வாக்கில் உங்களுக்கு கிடைக்கும்.
Prev Topic
Next Topic