2022 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

வேலை / உத்தியோகம்



குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக அரசியல் நடக்கும். உங்கள் மறைமுக எதிரிகள் மூலம் உங்களுக்கு எதிரான சாதிகள் நடக்கும். ஏப்ரல் 2022 வரை நீங்கள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட நேரலாம். இது உங்களுக்கு கடுமையான நேரத்தை ஏற்படுத்தலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்துவார். உங்களுக்கு உங்கள் அலுவாகத்தில் நடக்கும் பிரச்சனைகளை சமாளிக்க போதிய நேரம் கிடைக்காமல் போகலாம்.



ஆனால் மே 2022 ஐ அடைந்ததும், உங்கள் அலுவலகத்தில் விடயங்கள் இயல்பு நிலைக்கு மாறும். நீங்கள் உங்கள் மறைமுக எதிரி யார் என்பதை கண்டரிந்துக் கொள்வீர்கள் மேலும் அவர்களிடம் இருந்து விலகியும்விடுவீர்கள். உங்கள் அலுவலகத்தில் இருக்கும் பிற ஊழியர்கள் மற்றும் மேலாளருடன் இருக்கும் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை பெறுவீர்கள், மேலும் உங்களுக்கான முக்கியத்துவத்தையும் அலுவலகத்தில் பெறுவீர்கள்.


மேலும் இந்த 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும் என்பதையும் எதிர்பார்க்கலாம். மே 2022 முதல் நீங்கள் வேறு உத்தியோக மாற்றத்திற்கு முயற்சிக்கலாம். உங்களுக்கு போனஸ் மற்றும் பங்குகள் இந்த 2022 ஆண்டின் இறுதி காலாண்டில் கிடைக்கும் என்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆனால் பலவீனமாக சனி பகவானின் பெயர்ச்சியால் நீங்கள் பெரிய அளவில் சாதித்தாலும் உங்களுக்கு மன நிம்மதி இல்லாமல் இருக்கும். இது உங்களுக்கு பொருளாதார ரீதியில் சிறப்பான காலமாக இருக்கும், ஆனால் மனதளவில் இல்லை.

Prev Topic

Next Topic