2023 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரித்து இருந்தால், மீண்டும் அவர்களுடன் சேர இது நல்ல நேரம். உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நலல் செய்திகளைக் கொண்டு வருவார்கள். சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கலாம், ஆனால் பிரச்சனைகள் குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
திருமணம், புதுமனை புகுவிழா, ஆண்டுவிழா போன்ற சுப காரியங்கள் நிகழ்த்த இது நலல் நேரம். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த வேண்டும் என்றால், அதனை ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்திற்குள் செய்துவிட வேண்டும்.



ஜென்ம சனியின் தாக்கம் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உணரப்படும். உங்கள் குடும்பத்தில் இதனால் புதிய பிரச்சனைகள் தோன்றும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படலாம்.
உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் குறையும். ஆனால், நவம்பர் 4, 2023 முதல் இந்த ஆண்டு இறுதி வரை நீங்கள் மீண்டும் சோதனை காலத்தில் இருப்பீர்கள்.





Prev Topic

Next Topic