![]() | 2023 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்களுக்கு கடன் தந்தவர்களிடம் செட்டில்மென்ட் பேசி அதனை அடைத்து விடவும் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் உங்கள் கடன்களை விரைவாக அடைத்துவிடுவீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களும் உங்களுக்கு நல்ல ஆதரவைத் தருவார்கள். உங்கள் முந்தைய நிறுவனத்தில் இருந்து நிலுவையில் உள்ள சம்பளம் அல்லது இன்சூரன்ஸ் செட்டில்மென்ட் மூலம் உங்களுக்கு ஒரு பெரிய தொகையும் கிடைக்கும். உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை அதிகரிக்கும். புது வீடு வாங்க இது சிறப்பான நேரமாக இருக்கும். ஏப்ரல் 21, 2023 க்கு முன் நீங்கள் செட்டிலாகி விட முயற்சி செய்ய வேண்டும்.
ஜென்ம சனியின் மற்றும் குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரிபதால் ஏற்படக்கூடிய தாக்கம் உங்கள் நிதி நிலையை ஏப்ரல் 21, 2023 க்கு மேல் பாதிக்கலாம். இதனால் உங்கள் நிதி தேவைகளை சமாளிக்க நீங்கள் அதிக கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். உங்களுக்கு கடன் தந்தவர்கள் வட்டி விகிதத்தை அதிகரித்துக் கொண்டே போவார்கள். உங்கள் சொத்து வரி விகிதமும் அதிகரிக்கும். இதனால் உங்கள் நிதி சுமைகள் அதிகரிக்கும். நீங்கள் எந்த விதமான புதிய முதலீடுகள் செய்வதையும் தவிர்த்துவிட வேண்டும், நீங்கள் உங்களுக்கு இருக்கும் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
உங்களுக்கு இருக்கும் நிதி பிரச்சனைகள் செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் சற்று குறையும். ஆனால் இது தற்காலிகமான நிவாரணமே. நவம்பர் 4, 2023 க்கு பிறகு உங்களுக்கு மீண்டும் கடன்கள் அதிகரிக்கும். இந்த ஆண்டின் இறுதியில் உங்களுக்கு அதிகரித்துள்ள கடன்களால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic