![]() | 2023 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2023 முதல் ஜனவரி 17, 2023 வரை நல்ல அதிர்ஷ்ட்டம் (75 / 100)
நல்ல அதிர்ஷ்டங்கள் நிறைந்த சிறந்த காலமாக இந்த பாகம் உங்களுக்கு இருக்கும். குரு மற்றும் ராகுவின் பலத்தால் நீங்கள் உங்கள் சக்தியை மீண்டும் பெறுவீர்கள். யோகா, மூச்சு பயிற்சி செய்வது மற்றும் புண்ணிய தளங்களுக்கு செல்வதால் நேர்மறை ஆற்றல்களை அதிகரித்துக் கொள்வீர்கள். கடந்த மாதங்களில் உங்களுக்கு ஏற்பட்ட மோசமான நிகழ்வுகளில் இருந்து வெளியில் வர முயற்சி செய்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் சரி செய்து விடுவீர்கள்.
உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் குறையும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரிந்து இருந்தால், தற்காலிகமான நிவாரணம் உங்கள் வாழ்க்கையில் இப்போது கிடைக்கலாம். ஆனால், உங்களுக்கு கிடைத்துள்ள நிவாரணம் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பதால், மீண்டும் நீங்கள் காதலிப்பவருடன் இணைந்து உங்கள் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலனையும் பார்க்க வேண்டும். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். ஆனால், சனி பகவான் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சுப காரியங்கள் நிகழ்த்தும் போது உங்களுக்கு அதிக அழுத்தம் நிறைந்த சூழலும் மற்றும் செலவுகள் ஏற்படலாம்.
உங்களுக்கு தற்போது சரியான உத்தியோகம் இல்லாமல் இருந்தால், குறைந்த சம்பளம் மற்றும் குறைந்த பதவி நிலை என்றாலும் கூட ஒரு நல்ல வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு இருக்கும் வேலை அழுத்தம் மற்றும் உங்களுக்கு எதிரான அரசியல் குறையும். தொழில்முனைவோர்களுக்கு நல்ல பண வரத்தை ஏற்படுத்தக்கூடிய சிறிய ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் விசா ஸ்டாம்பிங் செய்ய உங்கள் தாய்நாட்டிற்கு பயணம் செய்யும் விடயங்களில் சில ரிஸ்க் எடுக்கலாம். ஆனால் இந்த பாகத்தில் நீங்கள் எந்த ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதகத்தின் ஆதரவு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
Prev Topic
Next Topic