![]() | 2023 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 04, 2023 வரை உங்கள் கடின உழைப்பிற்கான வெற்றி (70 / 100)
குரு செப்டம்பர் 4, 2023 அன்று வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும். சனி பகவான் முன்பே வக்கிர கதி அடைந்த நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்ல பலனைப் பெறுவீர்கள். ராகு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை இந்த பாகத்தில் வழங்குவார். உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் விரைவாக குணமடையும். உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். இதனால் உங்கள் மருத்துவ செலவுகளும் குறையும்.
உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த முயற்சிக்கலாம். அப்படி இல்லை என்றால், மே 2024, 2024 வரை காத்திருந்து அதன் பின்னர் செய்வது நல்லது. உங்கள் வாழ்க்கைத்துணையுடனும் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் குறையும். இருப்பினும், குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை. உங்களுக்கு இருக்கும் வேலை அழுத்தம் மற்றும் பதற்றம் இலகுவாகும். ஒரு ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று அல்லது அலுவலகத்தில் உங்களுடன் வேலை பார்க்கும் உயர் நிலை ஊழியரிடம் இருந்து ஆலோசனைப் பெற்று செயல்படுவதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம்.
கடந்த மாதங்களில் நீங்கள் செய்த தவறுகளை நீங்கள் உணருவீர்கள். உங்கள் நிதி நிலைகளை மிகவும் கவனத்துடன் கையாளுவீர்கள். இதனால் உங்களுக்கு இருக்கும் கடன்கள் குறையும். சட்டம், வருமான வரி மற்றும் ஆடிட் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். இருப்பினும் பங்குசந்தையில் புதிதாக பணம் முதலீடு செய்வது நல்ல யோசனையாக இருக்காது. நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்யலாம், ஆனால் அக்டோபர் 31, 2023 க்கு முன் பரிவர்த்தனைகளை முடித்துவிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic