![]() | 2023 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | உடல்நலம் |
உடல்நலம்
ராகு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் மற்றும் குரு உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏப்ரல் 2023 வரை மன உளைச்சல்கள் ஏற்படலாம். உங்களுக்கு ஏற்பட்ட வலிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும் கூறலாம். அடுத்த சில மாதங்களுக்கு உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட்டம் கிடைக்கும். நீங்கள் சரியான சிகிச்சை, ஆலோசனை மற்றும் ஆன்மிக வழிநடத்துதல் அல்லது சோதிட ஆலோசனை மூலம் விரைவாக குணமடைவீர்கள்.
உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கு நீங்கள் சரியான சிகிச்சையைப் பெறுவீர்கள். மேலும் சரியான மருந்துகளையும் உட்கொண்டு விரைவாக நலம் பெறுவீர்கள். புகை மற்றும் மது போன்ற பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாகி இருந்தால், அதில் இருந்து வெளியில் வந்துவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு கிடைக்கும் முன்னேற்றத்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ஆனால் குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம். உங்கள் குடும்பத்தினர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்கள் உடலில் இருக்கும் இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அர்பில் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் அதிகரிக்கலாம். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை நீங்கள் கலந்த பலன்களைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic