2023 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


2023 புத்தாண்டு பலன்கள் – கும்ப ராசி (Aquarius Moon Sign).
குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல பலன்களுடன் தொடங்கும். ராகு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். நீங்கள் உங்களுக்கு இருக்கும் மனக் கவலை, பதற்றம் மற்றும் உடல் உபாதைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கும். நீங்கள் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள். ஏப்ரல் 21, வரை நீங்கள் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.


சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதன் தாக்கத்தை ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் அதிகம் உணருவீர்கள். உங்களுக்கு அதிக மன அழுத்தமும் பதற்றமும் ஏற்படலாம். நீங்கள் உங்கள் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அலுவலகத்தில் விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம். உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம். உங்கள் குடும்ப சூழலில் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரை நீங்கள் குறிப்பிடத்தக்க நிவாரணத்தைப் பெறுவீர்கள். ஆனால் நவம்பர் 4, 2023 க்கு பிறகு நீங்கள் மற்றுமொரு சோதனை காலத்தில் இருப்பீர்கள். மொத்தத்தில் ஏப்ரல் 21, 2023 க்கு முன் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாக வேண்டும் மேலும் ஜென்ம சனியின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.



Prev Topic

Next Topic