2023 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023வரை அதிர்ஷ்ட்டம் மற்றும் கடின உழைப்பு (65 / 100)


இந்த பாகத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆனால் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் உங்கள் வேலைகளை கடினமாக்குவார். ஜனவரி 17,மு 2023 முதல் உங்களுக்கு ஜென்ம சனி காலம் தொடங்குகிறது. மார்ச் 28, 2025 வாக்கில் தான் நீங்கள் ஜென்ம சனியில் இருந்து வெளியில் வருவீர்கள். இந்த பாகத்தில் குரு மற்றும் ராகு உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தருவார்கள்.
உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த விடயங்களில் நீங்கள் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். ஜென்ம சனியின் தாக்கம் இந்த பாகத்தில் அதிகம் இருக்காது. நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் நல்ல அதிர்ஷ்டமும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் புது வீடு வாங்கி குடிபெயரலாம். உங்கள் வங்கிக் கடன் விரைவாக ஒப்புதல் பெரும்.


உங்கள் அலுவலகத்தில் நீங்கள் மிகவும் பிசியாக வேலை பார்ப்பீர்கள். நீங்கள் கடினமாக உழைப்பீர்கள், உங்களால் உங்களுக்கு எதிராக நடக்கும் அரசியலை சமாளிக்க முடியும் மேலும் நீங்கள் உங்கள் ப்ரோஜெக்ட்டை சரியான நேரத்தில் முடித்தும் விடுவீர்கள். ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்ய இது ஏற்ற நேரம். நீங்கள் பங்குசந்தையில் பணம் முதலீடு செய்ய வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். ஜென்ம சனி உங்கள் 401-K ரிடைர்மென்ட், கல்லூரி சேமிப்பு நிதி, IRA கணக்கு ஒன்றவற்றில் உங்களுக்கு இழப்புகளை ஏற்படத்தக்கூடும்.


Prev Topic

Next Topic