![]() | 2023 புத்தாண்டு வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்பு ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்பு |
வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்பு
தொழில்முனைவோர்கள் இந்த 2023 ஆம் புத்தாண்டின் தொடக்கத்தில் சில கடுமையான காலகட்டத்தைக் கடக்க நேரலாம். ஜனவரி 1, 2023 முதல் ஜனவரி 16, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் அதிக சவால்களை சந்திக்க நேரலாம். ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். மேலும் மிதமான முனேற்றத்தையும் வளர்ச்சியையும் காண்பீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க முயற்சிக்கலாம். பண வரத்து மிதமாகவே இருக்கும். உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை எடுக்காதீர்கள்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் ஜென்ம குருவால் நீங்கள் அதிக சவால்களை சந்திக்க நேரலாம். இதனால் உங்களுக்கு கிடைத்த ப்ரோஜெக்ட்டுகளை நீங்கள் உங்கள் போட்டியாளர்களிடம் இழக்க நேரலாம். உங்கள் பண வரத்து மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். நீங்கள் உங்கள் வணிகத்தின் நிர்வாக செலவிற்காக அதிக பணம் கடன் வாங்க வேண்டியத் தேவை ஏற்படலாம். மேலும் உங்கள் போட்டியாளர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது வணிக பங்குதாரர் அல்லது உங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களாலேயே நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்களுக்கு சட்ட பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 3௦, 2023 வரையிலான காலகட்டம் சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் முயற்சிகளை எடுக்கலாம். ஆனால் மே 2024 வரை பெரிய அளவிலான பணத்தை முதலீடு செய்வதை தவிர்த்துவிடுங்கள்.
Prev Topic
Next Topic