2023 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


இந்த 2023 புத்தாண்டு உங்களுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருக்கும். ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பது மற்றும் சுப காரியங்கள் நிகழ்த்துவது போன்ற முக்கிய காரியங்களைச் செய்ய முயற்சிக்கலாம்.
குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்தும் விடயங்களில் ஏப்ரல் 21, 2023 வரை அதிக நேரம் மற்றும் பணத்தை செலவிட உதவி செய்வார். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும்.


எதிர்பாராவிதமாக, ஜென்ம குரு மற்றும் ஜென்ம ராகு உங்களுக்கு ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை கசப்பான அனுபவத்தை உங்களுக்கு ஏற்படுத்துவார்கள். உங்களால் உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களிடம் இருந்து எந்த ஆதரவையும் எதிர்பார்க்க முடியாது. குடும்பத்தில் நடக்கும் அரசியல் அதிகரிக்கும். நீங்கள் தூக்கம் இல்லாத பல இரவுகளை கடக்க நேரலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் தற்காலிகமாக பிரியும் சூழலும் உங்களுக்கு ஏற்படலாம்.
செப்டம்பர் 4, 2023 க்கு பிறகு பிரச்சனைகள் ஒரு நிறுத்தத்திற்கு வரும். அதன் பின் டிசம்பர் 3௦, 2023 வரை உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை நீங்கள் பெறத் தொடங்குவீர்கள். டிசம்பர் 31, 2023 க்குள் உங்கள் உறவை உறுதிப்படுத்திக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள் ஏனென்றால், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.



Prev Topic

Next Topic