![]() | 2023 புத்தாண்டு (ஐந்தாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | ஐந்தாம் பாகம் |
நவம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை நல்ல பலன்கள் (75 / 100)
சனி பகவான் நவம்பர் 4, 2023 அன்று உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு இந்த பாகத்தில் வக்கிர கதி அடைந்த நிலையில் சஞ்சரிப்பார். ராகு பின்னோக்கி பெயர்ந்து உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார், கேது உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். மொத்தத்தில் இந்த கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். இருப்பினும் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்ட்டம் டிசம்பர் 31, 2023 வரை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். ஏனென்றால், ஜனவரி 2024 முதல் ஏப்ரல் 2024 வரை உங்களுக்கு நேரம் சிறப்பாக இல்லை.
நீங்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்க முயற்சி செய்யலாம். உங்கள் உடல்நலம் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முயற்சிப்பீர்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். நீங்கள் சுப நிகழ்சிகள் நிகழ்த்த வேண்டும் என்றால், அதனை டிசம்பர் 15, 2023 க்கு முன் செய்ய வேண்டும். உங்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரொஜெக்டில் வேலை செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்களது நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகளைச் செயல்படுத்த இது நல்ல நேரம்.
உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்கள் கடன்களை விரைவாக அடைத்துவிடுவீர்கள். உங்கள் கடன்களை குறைக்கவும் மாதாந்திர தவனைகளைக் குறைக்கவும் முயசிக்க இது ஏற்ற மாதம். பங்குச்சந்தை முதலீடுகளில் நீங்கள் நல்ல லாபத்தை காண்பீர்கள். ஆனால் ஜனவரி 2024 முதல் ஏப்ரல் 2024 வரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படலாம் என்பதால் டிசம்பர் 16, 2023 க்கு முன் நீங்கள் பங்குசந்தையை விட்டு வெளியேற முயற்சிக்க வேண்டும்.
Prev Topic
Next Topic