2023 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

ஜனவரி 01, 2023 முதல் ஜனவரி 17, 2023 வரை பண இழப்பு (35 / 200)


குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிலும், சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் இந்த 17 நாட்களுக்கு உங்களுக்கு பாதகமான பலன்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். இது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவது, புது வீட்டிற்கு வீட்டுப் பொருட்கள் வணகுவது போன்ற காரணங்களால் அதிகரிக்கும். மேலும் உங்கள் பயண செலவும் அதிகமாக இருக்கும்.
உங்கள் உடலில் உள்ள இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். எனவே நீங்கள் உங்கள் உணவின் மீது கவனம் செலுத்தி, உடற்பயிற்சி செய்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் அதிக பிரச்சனைகளைச் சந்திக்க நேரலாம். புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது ஏற்ற காலம் இல்லை. நேர்காணலில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.



உங்கள் வங்கிக் கடன் சரியான நேரத்தில் ஒப்புதல் பெறாமல் போகலாம். உங்களுக்கு நிதி பிரச்சனைகள் ஏற்படலாம். நீதிமன்ற வழக்குகள் ஏதேனும் நடந்து கொண்டிருந்தாள், அது சார்ந்த விடயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்காமல் போகலாம். சாதகமற்ற நீதிமன்ற தீர்ப்பால் உங்களுக்கு பண இழப்புகள் ஏற்படலாம். எந்த முதலீடுகளும் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. ரியல் எஸ்டேட் ப்ரோஜெக்ட்டுகள் உங்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தலாம். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.




Prev Topic

Next Topic