![]() | 2023 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 04, 2023 முதல் நவம்பர் 04, 2023 வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் (60 / 100)
குரு வக்கிர கதி அடைந்த நிலையில் ராகு உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் இணைந்து சஞ்சரிப்பதால் இந்த பாகத்தில் நீங்கள் நல்ல நிவாரணத்தைப் பெறுவீர்கள். நீங்கள் அறுவைசிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்தே மேலும் பலன் பெற முயற்சிக்க வேண்டும். மே 2024 வரை காத்திருந்து அதன் பின்னர் நீங்கள் அறுவைசிகிச்சை செய்து கொள்ள முயற்சிக்கலாம். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையின் அளவு இப்போது மீண்டும் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு சிறப்பாக இருக்கும். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம்.
உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் இலகுவாகும். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். இருப்பினும், உங்களுக்கு இப்போது கிடைத்துள்ள இந்த நேர்மறை மாற்றங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே. எனவே நீங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை உங்கள் உத்தியோகத்தில் எதிர்பார்ப்பதை விட இப்போது உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ளவே அதிகம் முயற்சிக்க வேண்டும். உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு இருக்கும் தேவையற்ற செலவுகள் குறையும். நீங்கள் குடிபுக தயாராக இருக்கும் வீட்டை வாங்கி குடிபெயர முயற்சிக்கலாம். அக்டோபர் 15, 2023 க்கு முன் வீடு வாங்குவது மற்றும் குடி புகுவது போன்ற விடயங்களை முடித்துவிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்கள் பங்குச்சந்தை முதலீடுகள் இந்த மாதம் ஓரளவு சிறப்பாக இருக்கும். இருப்பினும் நீங்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு இதில் இருந்து வெளியில் வந்துவிட முயற்சிப்பது நல்லது. பங்குசந்தையில் மேலும் பணத்தை முதலீடு செய்ய முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்காது.
Prev Topic
Next Topic