2023 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

உடல்நலம்


ஜென்ம ராகுவால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். நீங்கள் தூக்கம் இல்லாத பல இரவுகளை கடக்க நேரலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றம் ஏற்படலாம். கேது உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தை பாதிக்கலாம். உங்கள் மருத்துவ செலவுகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிக்கும்.
நீங்கள் ஏதானும் அறுவைசிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், அதனை ஜனவரி 17, 2023 க்குள் செய்துவிட முயற்சிக்கலாம். ஆதித்ய ஹிருதயம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்டு உங்கள் மன பலத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் நாள்பட்ட வலியில் இருந்து வெளியில் வருவீர்கள். நல்ல நிவாரணம் கிடைக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், ஆயுர்வேதம் அல்லது மூலிகை மருத்துவம் போன்றவற்றை முயற்சிப்பதால் நீங்கள் எளிதில் விரைவாகக் குணமடைய வாய்ப்பு உள்ளது.


ஆனால் ஏப்ரல் 21, 2023 முதல் ஜென்ம குரு நடப்பதால் நீங்கள் அதிக சவால்களை சந்திக்க நேரலாம். உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றம் ஏற்படலாம். உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகள் அதிகரிக்கலாம். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை இழக்க நேரலாம். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உடல்நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்கள் உடல்நலத்தில் காண்பீர்கள்.


Prev Topic

Next Topic