![]() | 2023 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வழக்கு |
வழக்கு
எதிர்பாராவிதமாக, நிலுவையில் இருக்கும் வழக்கில் உங்களால் வெற்றியைப் பெற முடியாமல் போகலாம். ராகு உங்கள் ஜென்ம ராசியிலும் குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகலாம். எனவே நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்கவும் நேரலாம். குழந்தை காவல், ஜீவனாம்சம் மற்றும் விவாகரத்து போன்ற ஏதேனும் வழக்கு இருந்தால், அது உங்களுக்கு சாதகமற்ற தீர்ப்பால் பெரிய மன வலியை ஏற்படுத்தக்கூடும். கிரிமினல் வழக்கில் இருந்து உங்களால் வெளியில் வர முடியாமல் போகலாம்.
ஜனவரி 17, 2023 முதல் வழக்குகளைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல ஏற்ற காலமாக இல்லை. ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் விடயங்கள் சற்று முன்னேற்றம் பெறத் தொடங்கும், பிரச்சனைகலின் தாக்கமும் குறையத் தொடங்கும். நீங்கள் நிலுவையில் இருக்கும் வழக்கில் நீதிமன்றம் செல்லாமல் செட்டில்மென்ட் பேச வாய்ப்பு கிடைத்தால், அதனைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது நல்லது.
இருபினும், ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் வழக்கில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காமல் போகலாம். உங்களுக்கு சாதகமற்ற தீர்ப்பு வருவதோடு பணத்தை இழக்கும் சூழலும் அவப்பெயர் ஏற்படக்கூடிய சூழலும் ஏற்படலாம். உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் செப்டம்பர் 4, 2023 க்கு மேல் குறையும், ஆனால் எந்த அதிர்ஷ்டத்தையும் உங்களால் எதிர்பார்க்க முடியாது.
Prev Topic
Next Topic