2023 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


2023 புத்தாண்டு பலன்கள் – மேஷ ராசி – Aries. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிலும் குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். சனி பகவான் உங்கள் உத்தியோகத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்துவார். ஆனால், சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு ஜனவரி 16, 2023 அன்று பெயர்ச்சி ஆனதும், 2 ½ ஆண்டு நீண்ட காலத்திற்கு பிறகு உங்களுக்கு நல்ல வளர்ச்சியைத் தருவார். குரு ஏப்ரல் 21, 2023 அன்று பெயர்ச்சியாவது ஒரு முக்கியமான பலவீனமான விடயமாக இருக்கும். இது ஜென்ம குரு என்பதால், நீங்கள் ஏப்ரல் 21, 2023 க்கு மேல் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள்.
ராகு உங்கள் ஜென்ம ராசியிலும் கேது உங்கள் களத்திற ஸ்தானத்திலும் அக்டோபர் 31, 2023 வரை சஞ்சரிக்கின்றார்கள். எனவே ராகு மற்றும் கேதுவிடம் இருந்து எந்த பலனையும் உங்களால் எதிர்பார்க்க முடியாது. ராகு உங்களுக்கு மனக் கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவார். கேது உங்கள் வாழ்க்கைத்துனையுடன் இருக்கும் உறவைப் பாதிப்பார்.


ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும், மேலும் ஓரளவு வளர்ச்சியும் உங்களுக்கு ஏற்படும். ஆனால் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள். செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரை இரண்டு மாதங்களுக்கு உங்களுக்கு கலந்த பலன்கள் உண்டாகும். நவம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை நீங்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.
மொத்தத்தில் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். ஆனால் ஜென்ம குரு உங்களுக்கு ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை இன்னல்களை ஏற்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் கவனமாக இருந்தீர்கள் என்றால், இந்த 2023 ஆம் ஆண்டை அமைதியாகவும் நிம்மதியாகவும் கடந்து விடலாம்.



Prev Topic

Next Topic