2023 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள், மற்றும் அரசியலில் இருப்பவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடினமான நேரத்தை சந்திப்பார்கள். ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பண வரத்து மிதமாகவே இருக்கும். நீங்கள் பயணம், வீட்டு பராமரிப்பு, புதுபித்தல், அலங்காரம் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றிற்காக பெரும் அளவு பணத்தை செலவு செய்வீர்கள்.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் நல்ல நிலையில் எடுத்துச் செல்ல உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி பணத்தை சேமிக்க முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் ஏப்ரல் 17, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும் நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு சட்ட பிரச்சனைகள், வருமான வரி மற்றும் ஆடிட் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 3௦, 2023 வரை உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic