![]() | 2023 புத்தாண்டு (மூன்றாம் பாகம் ) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை கடுமையான சோதனைக் காலம் (35 / 100)
கடந்த மாதங்களில் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்ட்டங்கள் தற்போது குரு உங்கள் ஜென்ம ஸ்தானத்திற்கு ஏப்ரல் 21, 2023 முதல் பெயர்ச்சி ஆவதால் முடிவுக்கு வரும். ராகு மற்றும் குரு உங்களுக்கு மோசமான பலன்களை உண்டாக்குவார்கள். எதிர்பாராவிதமாக சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. சனி பகவான் மெதுவாக நகரும் கிரகம் என்பதால், விரைவாக உங்களுக்கு உதவி தேவைப்படும் போது உங்களால் அதனைப் பெற முடியாமல் போகலாம்.
இந்த பாகத்தில் உங்கள் உடல்நலம் பாதிக்கபப்டலாம். உங்கள் பெற்றோர்களின் உடல்நலத்தில் அதிகம் கவனம் தேவை. நீங்கள் சிறிய வேலை பார்த்தாலும் விரைவாக சோர்வடைந்து போவீர்கள். உங்கள் சக்தியின் அளவு குறைவாக இருக்கும். உங்களுக்கு மயக்கம் மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களிடம் நீங்கள் கடுமையான வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடுவீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் தற்காலிகமாக பிரியும் சூழலும் ஏற்படலாம்.
அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படலாம். உங்கள் மறைமுக எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் சதியால் நீங்கள் மன நிம்மதி இல்லாமல் இருப்பீர்கள். உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அது உங்களுக்கு எதிராக மாறலாம். அலுவலகத்தில் உங்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நீங்கள் இழக்க நேர்ந்தால் அதில் ஆச்சரியபபட ஒன்றும் இல்லை. உங்களுக்கு கிடைக்கக் இருக்கும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தாமதமாகலாம். நீங்கள் இந்த காலகட்டத்தில் உங்கள் உத்தியோகத்தில் மாற்றம் செய்ய முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் சேமிப்புகள் அதிகரிக்கும் செலவுகளால் விரைவாக குறையலாம். பண விடயங்களில் நீங்கள் உங்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களாலேயே ஏமாற்றப்படலாம். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் தருவதையோ அல்லது யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவதையோ தவிர்த்துவிடுங்கள். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. புதிய கட்டுமான ப்ரோஜெக்ட்டுகளைத் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை. புதிய வீடு கட்ட முன்பணம் கொடுக்கும் விடயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நிதி இழப்பை ஏற்படுத்திவிடலாம்.
Prev Topic
Next Topic