2023 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகள் சார்ந்த விடயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் மார்ஜின் வர்த்தகம், லிவேரேஜ் நிதிகள், மற்றும் ஆப்சன் வர்த்தகம் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும். எந்த விதமான ஸ்பெகுலேடிவ் அல்லது வளார்ச்சி சார்ந்த முதலீடுகளும் உங்கள் வாழ்க்கையை மிகவும் மோசமாக்கிவிடலாம். ஜனவரி 17, 2023 வரை நீங்கள் மிகவும் மோசமான பலனை சந்திக்க நேரலாம். உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்பட்டாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் ஓரளவு லாபத்தை காண்பீர்கள். இருபினும், இந்த காலகட்டத்தில் நீங்கள் திட்டமிட்டே ரிஸ்க் எடுக்க முயற்சிக்க வேண்டும். நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைக்காக வீடு வாங்க முயற்சிக்கலாம். ஆனால், உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் சொத்துக்களில் முதலீடு செய்வதை தவிர்த்துவிடுங்கள்.


ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படலாம். இதனால் பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்கும் நிலை ஏற்படலாம். ஏப்ரல் 21, 2023 க்கு மேல் நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து முற்றிலுமாக விலகி விட முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும். செப்டம்பர் 4, 2023 முதல் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைத்தாலும் உங்களால் பெரிதாக நல்ல அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாது.


Prev Topic

Next Topic