2023 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்


குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் நீங்கள் சுப நிகழ்சிகளில் பங்குபெருவீர்கள். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் அதனை நீங்கள் சமாளிக்கவும் முயற்சிக்க வேண்டும். ஆஸ்திரேலிய, கனடா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமைப் பெற்று நீங்கள் குடியேற முயற்சித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால், அந்த முயற்சிகளை ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் செய்யலாம். 2024 இறுதி வாக்கில் உங்கள் விண்ணப்பம் ஒப்புதல் பெரும்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஜென்ம ராகு மற்றும் ஜென்ம குருவின் தாக்கம் அதிகம் உணரப்படும். உங்கள் உடல்நலம் பயணத்தின் போது பாதிக்கப்படலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் தேக்கம் அடையலாம். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து நீங்கள் உங்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் கட்டாயம் ஏற்படலாம் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.


செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 3௦, 2023 வரை பயணம் உங்களுக்கு கலந்த பலனைத் தரும். நீங்கள் புண்ணிய தளம் செல்ல திட்டமிடலாம். உங்கள் பிறந்த சாதகப் பலனைச் சார்ந்து உங்கள் வணிகம் சார்ந்த பயணம் உங்களுக்கு ஓரளவு வெற்றியைத் தரும்.


Prev Topic

Next Topic