![]() | 2023 புத்தாண்டு வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்புகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்புகள் |
வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்புகள்
தொழில்முனைவோர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மறைமுக எதிரிகள் இல்லாமல் செய்வார். சனி பகவானின் பாதகமான தாக்கம் ஏப்ரல் 21, 2023 வரை குறைவாக இருக்கும். புது முதலீட்டாளர்கள் அல்லது வணிக பங்குதாரரிடம் இருந்து உங்களுக்கு நிதி உதவிகள் கிடைக்கும். நீங்கள் உங்கள் வணிக வளர்ச்சிக்கு உதவக்கூடிய புதுமையான யோசனைகளை முன் கொண்டுவருவீர்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.
உங்களுக்கு அதிக பணவரத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். உங்களுக்கு அதிகரிக்கும் லாபத்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஏப்ரல் 21, 2023 க்கு முன் ரிஸ்க் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு நீங்கள் தற்போது இருக்கும் நிலையை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அஷ்டம சனியின் தாக்கம் ஏப்ரல் 21,. 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் அதிகம் உணரப்படும். உங்களுக்கு எதிரான சதியால் நீங்கள் உங்களுக்கு கிடைத்த நல்ல ப்ரோஜெக்ட்டுகளை நீங்கள் உங்கள் போட்டியாளர்களிடம் இழக்க நேரலாம்.
உங்கள் வணிக பங்குதாரர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். பண விடயங்களில் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். மேலும் உங்கள் வணிக முதலீட்டில் ஏற்படக்கூடிய இழப்புகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் முக்கிய கிரகங்கள் வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு தற்காலிகமாக நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic