![]() | 2023 புத்தாண்டு (ஐந்தாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | ஐந்தாம் பாகம் |
நவம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை திடீர் பின்னடைவுகள் (35 / 100)
எதிர்பாராவிதமாக. இது உங்களுக்கு ஒரு கடுமையான சோதனை காலமாக இருக்கும். அஷ்டம சனியின் தாக்கம் இந்த காலகட்டத்தில் அதிகம் உணரப்படும். ராகு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றத்தை அதிகரிப்பார். உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கும். நீங்கள் கடுமையான வார்த்தைகளை பேசிவிடலாம். இதனால் உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு பாதிக்கப்படலாம். இந்த பாக காலகட்டத்தில் சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்த்துவிடுங்கள்.
அலுவலகத்தில் நடக்கும் அரசியல் மற்றும் உங்களுக்கு எதிரான சதியால் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். நீங்கள் உங்கள் மேலாளரை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்றால், அதிக வேலைகள் செய்ய வேண்டும். உங்களால் எந்த வளர்ச்சியையும் உங்கள் உத்தியோகத்தில் இந்த காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. சம்பள உயர்வு மற்றும் வெகுமதிகள் சார்ந்த விடயங்களில் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் நிலையில் இருப்பவருக்கு உங்களை விட உயர் நிலைக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். புது வேலைக்கு முயற்சிக்க இது ஏற்ற நேரம் இல்லை.
அதிகரிக்கும் செலவுகளால் உங்கள் வருமானம் பாதிக்கப்படலாம். உங்களுக்கு தேவையற்ற மற்றும் எதிர்பாராத பயண செலவுகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் கார் மற்றும் வீட்டு பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக அதிகம் பணத்தை செலவு செய்ய நேரலாம். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு பெரும் அளவு இழப்பை ஏற்படுத்தலாம். நீங்கள் இந்த பாக காலகட்டத்தில் சூதாட்டம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு அடிமையாகலாம். நீங்கள் மேலும் அதிக பணத்தை இதனால் இழக்க நேரலாம். நீங்கள் இந்த காலகட்டத்தில் பங்குச்சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை.
Prev Topic
Next Topic