2023 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

நிதி / பணம்


இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் நீங்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு பணம் கடன் தந்தவர்களிடம் பேசி ஒரு நல்ல செட்டில்மென்ட்டிற்கு வருவீர்கள். இதனால் நீங்கள் விரைவாக உங்கள் கடன்களை அடைத்துவிடுவீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நல்ல ஆதரவாக இருப்பார்கள். மேலும் நீங்கள் முன்பு வேலை பார்த்த நிருவனத்தில் இருந்து நிலுவையில் இருக்கும் சம்பளம் அல்லது இன்சூரன்ஸ் செட்டில்மென்ட் போன்றவற்றால் உங்களக்கு ஒரு பெரிய தொகை செட்டில்மென்ட்டாக கிடைக்கும்/ உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணம் அதிகரிக்கும். புது வீடு வாங்க இது மிகவும் சிறந்த நேரமாக இருக்கும். ஏப்ரல் 21, 2023 க்கு முன் நீங்கள் நல்ல நிலையில் செட்டிலாகி விட முயற்சிக்க வேண்டும்.
அஷ்டம சனி மற்றும் குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் நிதி நிலையில் ஏற்படக்கூடிய தாக்கம் ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு அதிகமாக உணரப்படலாம். உங்கள் நிதி தேவைகளுக்காக நீங்கள் அதிக பணம் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். இதனால் உங்கள் கடன்கள் அதிகரிக்கலாம். உங்களுக்கு பணம் கடன் தந்தவர்கள் வட்டி விகிதத்தை அதிகரிப்பார்கள். உங்கள் சொத்து வரை அதிகரிக்கலாம். இதனால் உங்கள் நிதி சுமை மேலும் அதிகரிக்கலாம். நீங்கள் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.


செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு இருக்கும் நிதி பிரச்சனைகளுக்கு சற்று விடுப்பு கிடைக்கும். ஆனால் இது தற்காலிகமானது தான். நவம்பர் 4, 2023 க்கு மேல் உங்களுக்கு கடன்கள் அதிகரிக்கலாம். இந்த ஆண்டின் இறுதி பகுதியில் அதிகரிக்கும் கடன்களால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள்.


Prev Topic

Next Topic