![]() | 2023 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2023 முதல் ஜனவரி 17, 2023 வரை நல்ல அதிர்ஷ்ட்டம் (85 / 100)
குரு உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இந்த பாகத்தில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் உங்கள் பெற்றோர்களின் உடல்நலத்தின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் நல்ல ஆதரவாக இருப்பார். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வருவார்கள்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், காதலிக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் திருமணம் செய்து கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாக இது நல்ல நேரமாக இருக்கும். திருமணம் ஆனவர்கள் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தைப் பேறுக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தை இப்போது இயற்கையாகவே பெறுவார்கள். IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சையும் உங்களுக்கு நல்ல செய்திகளைத் தரும்.
உங்கள் முதலாளி உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் நல்ல ஆதரவாக இருப்பார். நல்ல சம்பளத்துடன் உங்களுக்கு அடுத்த நிலைக்குச் செல்ல நல்ல வாய்ப்புகளும் பதவி உயர்வும் கிடைக்கும். மேலும் பெரிய நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பும் கிடைக்கும். உங்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் உங்களது வேகமான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். தொழில்முனைவோர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொலைதூர பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். வெளிநாட்டிற்கு குடிபெயர இது சிறப்பான நேரமாக இருக்கும்.
உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண மழை உங்களுக்கு பொழிய வாய்ப்பு உள்ளது. நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயரும் வாய்ப்புகளும் உங்களுக்கு உண்டாகும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் நீங்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நீங்கள் முதலீடு செய்யும் சொத்துக்களை வாங்க முயற்சிக்கலாம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு பிரபலமாகும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது.
Prev Topic
Next Topic