2023 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 04, 2023 வரை உங்கள் கடின உழைப்பிற்கான வெற்றி (70 / 100)


செப்டம்பர் 4, 2023 அன்று குரு வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். சனி பகவானும் வக்கிர கதி அடைந்த நிலையில் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். ராகு கேதுவால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் பெரும் அளவு குறையும். உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கு நீங்கள் விரைவாக தீர்வு காண்பீர்கள். நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். உடல் உபாதைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும்.
குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிடலாம். அப்படி இல்லை என்றால், மே 2024 வரை காத்திருந்து அதன் பின்னர் நீங்கள் சுப காரியங்களைச் செய்யலாம். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் குறையும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் குழந்தை பேறுக்கு திட்டமிடுவது நல்ல யோசனையாக இருக்காது. உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் இலகுவாகும். நல்ல ஆலோசகர் பெற்று அல்லது உயர் நிலை ஊழியர்களிடம் இருந்து ஆலோசனைப் பெற்று உங்கள் அலுவலகத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படத் தொடங்குவீர்கள்.



நீங்கள் கடந்த மாதங்களில் செய்த தவறுகளை உணருவீர்கள். உங்களால் உங்கள் நிதி நிலையை மிகவும் கவனமாக சமாளிக்க முடியும். உங்கள் கடன்கள் குறைந்து கொண்டே போகும். சட்ட பிரச்சனைகள், வருமான வரி மற்றும் ஆடிட் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் புதிதாக பங்குசந்தையில் முதலீடு செய்வது நல்ல யோசனையாக இருக்காது. நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்யலாம், ஆனால் நவம்பர் 4, 2023 க்கு முன் பரிவர்த்தனைகளை நீங்கள் முடித்துவிட வேண்டும்.




Prev Topic

Next Topic